Wednesday 24 September 2014

எங்கே இருக்கிறோம்? எப்படி இருக்கிறோம்?

இலங்கையில் சிங்கள இனத்திலும் ஆடு மாடு மேய்க்கும் இடையர்கள் இருக்கலாம். அரேபியாவிலும் ஆடு மாடு ஒட்டகம் மேய்க்கும் இடையர்கள் இருக்கலாம். இப்படித்தான் உலகிலுள்ள எல்லா மொழிகளிலும் கால்நடைகளை மேய்க்கும் இடையர்கள் இருக்கிறார்கள். தொழிலால் அவர்களும் நமக்கும் ஒற்றுமை இருக்கலாம். ஆனால் அவர்கள் வேறு, நாம் வேறு. அவர்களின் பெருமைகளை நமதானதாகவும் எண்ணிக்கொள்வதால் உண்மையில் ஒரு பயனும் இல்லை. அதனால் மேலோங்கும் மயக்கத்தில் தம் சொந்த மண்ணின் பழம்பெருமைகளை அறிஞர்களை நாம் அறியவும் கொண்டாடவும் மறப்போம். நம் மண்ணில் தோன்றிய நம் பாட்டன்கள் செந்நாப்புலவர் கார்மேகக்கோனார் மற்றும் புதுவை ஆனந்தரங்கம் பிள்ளை, பேராசிரியர் தொ.பரமசிவம் ஆகியோர்களைப் பற்றி நம் இளைஞர்களில் எத்தனைப் பேருக்குத் தெரியும்? கிருஷ்ணர் கதையை விட ஒரு பழம் சமூகத்தின் விடுதலைக்கு இது மிக அவசியமன்றோ? எப்படி சிங்கள அரேபிய இடையர்களும் தமிழ் இடையர்களும் ஒன்றல்லவோ அப்படித்தான் பிற மொழிக்காரர்களும். அதற்காக அவர்களுடன் பிரிவினையோ பகையோ பாராட்டத் தேவையில்லை. தமிழர்களாகிய நாம் நம் பெருமைகளை அறிந்து போற்றிப் பாதுகாக்க முன்னுரிமை கொடுக்க வேண்டும். இதுவே இந்த மண்ணில் நமக்கு நிலையான பலம். விழிப்புணர்ச்சி இல்லாவிடில் 500 வருடங்கள் கழித்து நம் பேரப்பிள்ளைகளை வடக்கிருந்து தமிழ்நாட்டுக்கு இடம்பெயர்ந்த வந்தேறிகளாக யாரேனும் கருத நேரலாம். தமிழ் இலக்கியத்தின் மிகப்பெரும் அறிவுசார் சமூகமான நாம் நம் மண் சார்ந்த தமிழ் அடையாளங்களை தவிர்ப்பது ஆபத்தானது. நம் முல்லை நில இடையர் குடி மக்களின் பெருமைகளை நம் தமிழ் மக்களிடம் எடுத்துச் சொல்வோம்...

1 comment:

  1. நமது நண்பர் ஏன் இலங்கைக்கும் அரேபியாவிற்கும் உதாரணங்களை தேடி சென்றார் என தெரியவில்லை. காரணம் நமது கிராமத்திலேயே நமக்கு பக்கத்துக்கு வீட்டிலேயே ஆடு மாடுகளை மேய்க்கும் பல சமூக மக்கள் உள்ளனரே ! தலித் , வன்னியர் , கவுண்டர், தேவர் , என பல சாதி மக்களும் கால்நடை வளர்ப்பு தொழிலை செய்து வருகின்றனர், ஆதாலால் அவர்களை அனைவரையும் யாதவர்கள் என்று ஏன் நாங்கள் கூறவில்லை ? காரணம் யாதவர்கள் என்போர் யார் என்பதில் நாங்கள் தெளிவாக உள்ளோம் என்பதை அறிக. கால்நடை மேய்ப்போர் அனைவரும் யாதவர்கள் என்று நாங்கள் எப்போது கூறினோம் ? அவ்வாறு கூறாதவரிடத்தில் சென்று இலங்கையில் ஆடு மாடு அரேபியாவில் ஆடு மாடு மேய்க்கரவனும் நீயம் ஒரே சாதிய என கேட்டபது சரியா ? இந்த கேள்வியில் முற்றிலும் உடன்பாடில்லை எனக்கு ! தவறான கேள்வி !

    ReplyDelete